14.10.17

ஊர் அயல் செய்திகள் 2017 -III

மட்டுவில் விபத்தில் இருவர் காயம்!
[Friday 2017-12-29 08:00]

சாவகச்சேரி- புத்தூர் வீதியில், மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9:40 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இரு இளைஞா்களும் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த போது வேலுப்பிள்ளை சனசமூக நிலையத்திற்கு முன்னால் வேலியுடன் மோதி படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மட்டுவில் பகுதியை சேர்ந்த கே.காருசன் (வயது 17) எஸ் சர்மிலன் வயது 19 என்ற இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கழிப்பறை இல்லாததால் காடுதேடும் மக்கள் 25.12.17

தலைக்கவசத்தினால் சயந்தனை தாக்கவில்லை! - அருந்தவபாலன் 
[Saturday 2017-12-16 08:00]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தல் வேட்பாளர்  தெரிவு தொடர்பாக  தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோருக்கு இடையிலான மோதலில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச், சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் கருத்து தெரிவிக்கையில்,“ நான் உட்பட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து புதன்கிழமை இரவு 1 மணிவரையிலும் பரிசீலனை செய்து நகர சபைக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றை தயாரித்திருந்தோம்.
அதனை நேற்றுமுன்தினம் காலை ஒப்பிடுவதற்கும் தீர்மானித்திருந்தோம். மாகாண சபை உறுப்பினர் குறித்த நேரத்தில் வருவதாக தெரிவித்திருந்த போதிலும் அந்த நேரத்தில் அவர் வந்திருக்கவில்லை. எனினும், நேரம் தாமதித்து வாகனம் ஒன்றில் ஆட்களுடன் வந்திறங்கினார். இதனையடுத்து வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர் யாருக்கும் தெரியாமல் சேர்க்கப்பட்டன. இதுதான் பிரச்சினைக்கு காரணம். இறுதி நேரத்தில் கே.சயந்தன் அவர்களின் நடவடிக்கையினால் சில இழுபறி நிலைகளும் ஏற்பட்டிருந்தன. இதன் போது காரில் சென்ற கல்வி நிர்வாகசபை அதிகாரி ஒருவரை இழுத்து வீழ்த்துவதற்கான நிலைமையை கூட அவர் ஏற்படுத்தியிருந்தார்.
அதனை நான் தடுக்க முற்பட்டிருந்தேன். இதன் போது கையில் தலைக்கவசத்தை வைத்திருந்தேனே தவிர யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. நாங்கள் வன்முறையை விரும்புவதில்லை. எவ்வாறாயினும், எங்களது பகுதியில் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்ற தனி நபர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மக்கள் விரைவில் தகுந்த பாடத்தை காண்பிப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரவிதிகளின் நிலை.
16.12.17

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் கூட்டமைப்பு OUT?

சாவகச்சேரி நகரசபைக்கு 9 அரசியல் கட்சிகள் போட்டி! 
[Thursday 2017-12-14 19:00]

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்த நிலையில் சகல கட்சிகளுக்குமான கூட்டம் இன்று நண்பகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் ம.அகிலன் தலைமையில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர்,வேட்புமனுக்களை தாக்கல் செய்த ஒன்பது கட்சிகளின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

கைவிடப்படும் முதியோரால் நிரம்பி வழியும் கைதடி முதியோர் இல்லம்! 

[Thursday 2017-12-14 08:00]

கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் இட­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. கைவி­டப்­பட்ட முதி­ய­வர்­கள் இல்­லத்­தில் சேர்க்­கப்­பட்டு வரு­வ­தால் நெருக்­கடி நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் முதி­யோர் இல்­லத்­தில் முதி­ய­வர்­க­ளைச் சேர்ப்­பது தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார்.

220 வரை­யி­லான முதி­ய­வர்­கள் இங்கு தங்­கி­யுள்­ள­னர். உற­வி­னர்­க­ளால் பரா­ம­ரிப்பு இன்றிக் கைவி­டப்­பட்ட முதி­ய­வர்­க­ளும் வைத்­தி­ய­சா­லை­க­ளில் சிகிச்­சைக்­காகச் சேர்க்­கப்­பட்டு அநா­த­ர­வா­க­வுள்ள முதி­ய­வர்­க­ளுமே சில நாள்­க­ளாக முதி­யோர் இல்­லத்­தில் இணைக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.இதன் கார­ண­மா­கவே இந்­த­நிலை ஏற்­பட்­டுள்­ளது என்­றார்.
தாய்வீடு சென்ற மகனுக்கு தந்தை செய்த கொடூரச் செயல்
கெற்பேலி கொடிகாமம்

வடக்கில் உதயமாகிய புதிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது

வடக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே இக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அ. ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களே கட்டுப்பணத்தை  இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.,  தமிழரசுக்கட்சி கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாதென தெரிவித்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டமைப்பொன்றை அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

மீசாலை விபத்தில் வயோதிப பெண் பலி! 

[Wednesday 2017-12-06 19:00]
மீசாலையில் இன்று நடந்த விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாவகச்சேரியிலிருந்து மீசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளே விபத்தில் சிக்கினர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் வீதியில் நிறுத்தப்பட்ட காரொன்றின் கதவு திறக்கப்பட்டதால் மோதி விழுந்தனர் என்றும், பின்புறம் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்மீ து ஏறியது என்றும் தெரிவிக்கப்பட்டது. 65 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்தார்.

சாவகச்சேரியைக் கலக்கும் அஜித் குழு! - மானிப்பாயில் வாளுடன் ஒருவர் கைது
[Tuesday 2017-12-05 18:00]

மீசாலை பிரதேசத்தில் இரண்டு பேர் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வெட்டுக்கு சாவகச்சேரியில் இயங்கிவரும் “அஜித்” குழுவே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது, இதன்​போது காயமடைந்த இரண்டு இளைஞர்களும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான செல்வராஜ் கஜீவதன் மற்றும் 17 வயதான அல்பட் அலெக்ஸ் ஆகிய இருவ​ருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், சாவகச்சேரியில் இயங்கிவரும் “அஜித்” குழுவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று பகல் 11.15 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

5.12.17

சாவகச்சேரியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்! 

[Sunday 2017-12-03 07:00]

சாவகச்சேரியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த இரு மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையான யாழ்.எப்.எம் இல் கடமையாற்றும் ஊடகவியலாளர் மீதே நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரியிலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே, சாவகச்சேரி- தனங்களப்பு வீதியில் மர்மநபர்கள் வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்கியவர்கள் CP _QE 4876 பச்சை கலர் ஆட்டோவில் மதுபோதையில் காட்டுத்தனமாக தாக்கியுள்ளனர்.
அங்கிருந்த பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இரண்டு முஸ்லிம்கள் ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் பியர் மதுபோத்தலால் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆட்டோவில் தப்பிச் சென்றதாகவும், சம்பவத்தினைக் கண்ட பொது மக்கள் தெரிவித்தனர்.தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏ9 வீதியில் மீசாலையை சேர்ந்த இருவர் விபத்தில் பலி
26.11.17

முடங்கியது வடக்கு
14.10.17