2.1.09

செய்திகளில் ஊரும் அயலும்- சனவரி/பெப்.2009




















































க.பொ.த (உ.த)2008 பெறுபேறு/ மட்டுவில் ம.வி



கைதடி கலைவாணி
க.பொ.த. உயர்தரம் பெறுபேறு







மிருசுவில் முகாமில் இடப்பற்றாக்குறை
வெளியில் செல்ல அனுமதி மறுப்பு

Wednesday, 21 January 2009 12:48 .(TamilSkyNews.com)

இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மிருசுவில் நீக்கலஸ்பிள்ளை தேவாலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இங்குள்ள பொதுமக்கள் முகாமைவிட்டு வெளியில் செல்வதற்கு இராணுவத்தினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்துவருவதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சி, வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 1300க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிரதேச செயலம் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரண கடமைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இப்பிரதேசத்தில் இருக்கும் தமது உறவினரைச் சந்திப்பதற்கோ அல்லது உறவினர் அவர்களைச் சந்திப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் முகாமிலுள்ளவர்களைப் பார்வையிடச் சென்ற யாழ் செய்தியாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி, ஊடகவியலாளர்களை முகாமினுள் நுழைய அனுமதிக்க முடியாதென இராணுத் தளபதி கூறியதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் சாவகச்சேரியில் இராணுவத்தினரின் வாகனத் தொடரணி பயணிப்பதால் இப்பகுதியில் உள்ள வீதிகள் அடிக்கடி மூடப்படுவதாகவும், இதனால் இப்பகுதி பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாதிருப்பதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




க.பொ.த.(உ.த)பரீட்சை முடிவுகள்








வீரகேசரி/17.1.2009






ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

வீரகேசரி நாளேடு 1/15/2009 9:51:29 PM -
வன்னியில் முல்லைத்தீவு பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதையடுத்து அங்கிருந்து மக்கள் யாழ். குடாநாட்டுப் பகுதிக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் வந்தவண்ணமுள்ளதாக தென்மராட்சி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று புதன்கிழமை இரவு இயக்கச்சி பகுதிக்கு சென்ற தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள் அங்கு தங்கியிருந்த மக்களை வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இவர்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட பலர் கடும் நோய்வாய்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வந்த மக்கள் மிகவும் பசிக் களைப்புடன் கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்தவாறு வருகை தந்துள்ளதாக தென்மராட்சி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். குடாநாட்டுக்கு பாதுகாப்பு தேடி வரும் வன்னி மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு பொது அமைப்புகளிடமும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னிப் பகுதியிலிருந்து வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு இன்று 403 பேர் வந்துள்ளனர். வன்னி அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து வருகை தந்த சுமார் 1277 பொதுமக்கள் நேற்று படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சுமார் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1808 க்கும் மேற்பட்டோர் இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தடைந்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது







அதிபர் நியமனம்
10.01.2009

மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலய அதிபராக வரணி குடமியன் அ.த.க.பாடசாலை அதிபர் கா.குணசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.சரஸ்வதி வித்தியாலய அதிபர் வெ. நடராசா
கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து குடமியன் அ.த.க.பாடசாலை அதிபர் கா.குணசிங்கம் நியமிக்கப்பட்டு கடந்த முதலாந்திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கல்வி அமைச்சினால் சிறந்த செயல்பாட்டு அதிபராக கடந்தவருடம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















செய்தி ஆதாரம் குறிப்பிடப்படாத செய்திகள் யாவும் உதயன் மின்னிதழிலிருந்து பெறப்பட்டவை